செவ்வாய், 12 ஜூலை, 2011

ரீ ஆதி சங்கர் அருளிய குரு அஷ்டகம்

 
 
ஸ்ரீ ஆதி சங்கர் அருளிய குரு அஷ்டகம்


சரீரம் ஸுருபம் ததாவா களத்ரம்
யசஸ்சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்
மனஸ்சேந்ந லக்னம குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்

கலத்ரம் தனம் புத்ர பெளத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா: ஸர்வம் ஏதத்தி ஜாதம்
மனஸ் சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ஷடங்காதி வேதோமுகே சாஸ்த்ர வித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

விதேசேஷு மான்ய: ஸதேசேஷு தன்ய:
ஸதாசாரவ்ருத்தேஷு மத்தோ ந சான்ய:
மனஸ்சேந்த லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

க்ஷமாமண்டலே பூபபூபால வ்ருந்தை:
ஸதாஸேவிதம் யஸ்ய பாதார விந்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

யஸோதேக தம் திக்ஷு தானப்ரதாபாத்
ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத் ப்ரஸாதாத்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ந போகே ந யோகே ந வா வாஜிராஜம்
ந காந்தாமுகேநைவ வித்தே ஷுசித்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்த்ததே மே த்வனர்க்யே
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ
யதிர் பூபதில் ப்ரஹ்மசாரீ ச கேஹீ
லபேத் வாஞ்சி தார்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்.
 
 

ஸ்ரீ கணாஷ்டகம்

 
 


ஏகதந்தம் மஹாகாயம்
தப்ரத காஞ்சன சந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனகரம்
நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து சகலம் மௌலௌ
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சித்ரரத்ன விசித்ராங்கம்
சித்ரமாலா விபூஷிதம்
காமரருபதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கஜவக்ரம் சுரஸ்ரேஷ்டம்
கர்ண சாமரபூஷிதம்
பாசாங்குசதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மூஷகோத்தம மாருஹ்ய
தேவாசுர மஹா ஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

யக்ஷகின்னர கந்தர்வ
சித்தவித்தியா தரைத்ததா
ஸ்தூயமானாம் மஹாபாஹும்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

அம்பிகாஹ்ருத யானந்தம்
மாத்ருபிர் பரிவேஷ்டிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சர்வ விக்னஹரம் தேவம்
சர்வ விக்னவிவர்ஜிதம்
சர்வ சித்தி ப்ரதாதாரம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர:
சித்தயந்திசர்வகார்யாணி வித்யாவான்தனவான் பவதி.

இதி ஸ்ரீ கணாஷ்டகம் சம்பூர்ணம்.

ஸ்ரீ தக்ஷிணாமூர்தி அஷ்டகம்..



 ஸ்ரீ தக்ஷிணாமூர்தி அஷ்டகம்..


விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயாக:
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ஸ்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ யஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

யஸ்யைவ ஸ்புரணம் சதாத்மக மசத் கல்பார்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்வமசீதி வேதவசஸா யோ போத யாத்யாஸ்ரிதான்
ய: சாக்ஷாத் கரணாத் பவேன்ன புனராவ்ருத்திர் பவாம்போனிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹி:ஸ்பந்ததே
ஜானா மீதி தமேவ பாந்தம் அனுபாத் ஏதத்சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

தேஹம் பிராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீபாலாந்த ஜடோபமா ஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாச கல்பித மஹா வ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

ராஹு கிரஸ்த திவாகரேந்து சதுசோ மாயா சமாச் சாதநாத்
சன்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பால்யாதிஷ்வபி ஜாக்ரதா திஷிததா சர்வாஸ்வ வச்தாத்வபி
வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்த்தமானமஹ மித்யந்த ஸ்புரந்தம் சதா
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வஸ்வாமி சம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பூரம்பாம்ஸ்ய நாளோ நிலோம்பர மஹர் நாதோ ஹிமாம்சு புமான்
இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத்கிஞ்சன வித்யதே விபுசதாம் யஸ்மாத் பரச்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

சர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேனாஸ்ய ஸ்ரவணாத் ததர்த்த மனநாத்யானாச்ச சங்கீர்த்தநாத்
சர்வாத்மத்வமஹா விபூதி ஸஹிதம் ச்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
சித்தயே தத்புனரஷ்டதா பரிணதம் சைஸ்வர்ய மவ்யாஹதம்.
 
 
 
சகாதேவனின் சாஸ்திரமும், அமாவாசை முன்னுக்கு வந்த விதமும்..

பாண்டவர் வனவாசம் முடித்து வந்ததும், அவர்களுக்குரிய நாடுதரலாம் என்று கூறியிருந்தான் துரியோதனன். நாடு தருவதாகச் சொன்ன துரியோதனன், அவர்கள் திரும்பி வந்தபின் ஒரு ஊரையேனும் கொடுக்க மறுத்தான்! துரியோதனனாதியோர் அதர்ம வழியில் நடப்பதை எல்லோரும் கண்டித்தனர், ஆனாலும் பலன் அளிக்கவில்லை.

கிருஷ்ணரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார். அதர்ம துரியோதனன் போரையே விரும்பினான்! இறுதியில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாத தேர் சாரதியாக பாண்டவர் பக்கமும், அவரது படையை துரியோதனனும் எடுத்துக் கொண்டான். அதர்ம வழியில் செல்பவர்கள் அழிய வேண்டுமே! ஆகவே போர் முடிவாயிற்று.

பஞ்சபாண்டவர்களில் கடைசித்தம்பியான சகாதேவன் சாஸ்திரக் கலையை கரைத்துக் குடித்தவன். ஆகவே, துரியோதனன் இவனிடம் வந்து, போரை எப்பொழுது ஆரம்பித்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டான். தர்மவழியில் நடக்கும் பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான இவன் "வருகிற அமாவாசையில் துவங்கினால் உனக்கே வெற்றி" என்ற உண்மையைக் கூறினான்! சகாதேவன் துரியோதனனுக்கு நாள் குறித்துக் கொடுத்த விஷயம் கிருஷ்ணருக்கும் எட்டியது.

நாளை அமாவாசை.. ஆகவே, போர் ஆரம்பிப்பதற்கு எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். நாளை அமாவாசை என்று இருந்தபொழுது, அமாவாசைக்குரிய சடங்குகளை இன்றே நடத்துங்கள் என்று பாண்டவர்களுக்குக் கட்டளையிட்டார் கிருஷ்ணர். நாளைதானே அமாவாசை என்று அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். கிருஷ்ணர் எல்லோரையும் வரவழைத்து, அமாவாசைக்குரிய சடங்கை அவரே ஆரம்பித்து வைத்தார்.

அமாவாசைக்குரிய சடங்குகள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது! சூரியனும், சந்திரனும் மிக கிட்டவே நின்றிருந்த சமயம் அது. "இவர்கள் நாளை செய்ய வேண்டிய சடங்கை இன்றே செய்கிறார்களே...நாம் போய் நாளைதான் அமாவாசை என்பதை விளக்கிக் கூறுவோம்" என்று தீர்மானித்த சூரியரும் சந்திரரும், இறங்கி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். "நாளை தானே அமாவாசை, இச்சடங்கை நாளை செய்யுங்கள்" என்று கூறியவாறு, அதை நிறுத்த முயன்றனர்.

அப்பொழுதுதான், மோகனப் புன்முறுவலுடன் நின்ற கிருஷ்ணரை சூரியனும், சந்திரனும் கண்டனர். "சூரிய சந்திரர்களே! கொஞ்சம் பொறுங்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாளன்றோ அமாவாசை! இப்பொழுது இருவரும் சேர்ந்துதானே இங்கே நிற்கிறீர்கள். ஆகவே, இன்று தானே அமாவாசை" என்றார் கிருஷ்ணர்! விஞ்ஞான ரீதியிலும், சூரியனும் சந்திரனும் ஒன்றாக நிற்கும் பொழுதே, பூமிவாசிகளுக்கு அமாவாசை.

ஆகவே சூரியர் சந்திரருக்கு அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று! அதைத் தொடர்ந்து, அமாவாசை சடங்கு தடல்புடலாக நடந்து முடிந்தது. துரியோதனன் மறுநாளே போரை ஆரம்பித்தான், ஆகையினால் அவனால் வெற்றிபெற முடியவில்லை.
 

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம்.

பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின் பாத தூசியும்...

அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா... எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது... நம்பமுடியவில்லையே" என்றாள்.

இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.

"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.

"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.

நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.

"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.

நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.

"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.

"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.

கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.
 
  
 
  ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம்.



கமலாகுச சூசுக குங்குமதோ
நியதாருணி தாதுல நீலதனோ
கமலாயத லோசன லோகபதே
விஜயீபவ வேங்கட சைலபதே.

ஸசதுர்முக ஷண்முக பஞ்ச முக
ப்ரமுகாகில தைவ தமௌளிமனே
சரணாகத வத்ஸல ஸாரநிதே
பரிபாலய மாம் வ்ருஷசைலபதே.

அதிவேலதயா தவ துர்விஷஹை:
அனுவேல க்ருதை ரபராதசதை:
பரிதம் த்வரிதம் வ்ருஷசைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே

அதிவேங்கட சைல முதாரமதே
ஜனதாபி மதாதிக தானரதாத்
பரதேவதயா கதிதான் நிகமை:
கமலா தயிதான்ன பரம் கலயே.

கலவேணு ரவா வஸகோபவதூ
ஸதகோடி வ்ருதாத்ஸ்மர கோடிஸமாத்
ப்ரதிவல்ல விகாபி மதாத் ஸுகதாத்
வஸுதேவஸுதான் ந பரம் கலயே.

அபிராம குணாகர தாசரதே
ஜகதேக தனுர்த்தர தீரமதே
ரகுநாயக ராம ரமேச விபோ
வரதோ பவதேவ தயாஜலதே.

அவனீ தனயா கமனீயகரம்
ரஜனீகரசாரு முகாம்புருஹம்
ரஜனீ சரராஜ தமோமிஹிரம்
மஹனீய மஹம் ரகுராம மயே.

ஸூமுகம் ஸூஹ்ருதம் ஸுலபம் ஸுகதம்
ஸ்வனுஜஞ்ச ஸுகாய மமோக சரம்
அபஹாய ரகூத்வஹ மன்யமஹம்
ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே.

வினா வேங்கடேசம் ந நாதோ ந நாதஸ்
ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி.
ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச.

அஹம் தூரதஸ்தே பதாம் போஜ யுக்ம
ப்ரணாமேச்சயாகத்ய ஸேவாம் கரோமி
ஸக்ருத் ஸேவாய நித்ய ஸேவாபலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச.

அக்ஞானினா மயா தோஷான்
அஷேஸான் விஹிதான் ஹரே
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம்
சேக்ஷசைல சிகாமணே.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.


ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.


ஸரஸ்வதீ மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலயா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
ஸிவாநுஜா புஸ்தகப்ருத் ஜ்ஞாநமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாஸிநீ.

மஹாஸ்ரயா மாலிநீ ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மஹோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஸா மஹாகாரா மஹாங்குஸா
பீதாச விமலா விஸ்வா வித்யுந்மாலா ச வைஷ்ணவி.

சந்த்ரிகா சந்த்ரவதநா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுரஸாதேவீ திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ ஸிவா.

ஜடிலா விந்த்யவாஸா ச விந்த்யாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவி ப்ராஹ்மீ ப்ரஹ்மஜ்ஞாநைக ஸாதநா
ஸௌதாமிநீ ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாசிநீ ஸுநாஸாச விநித்ரா பத்மலோசநா.

வித்யாரூபா விஸாலாக்ஷீ ப்ரஹ்மஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்திஸ் த்ரிகாலஜ்ஞா த்ரிகுணா ஸாஸ்த்ரரூபிணீ
ஸும்பாஸுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்தபீஜநிஹந்த்ரீச சாமுண்டா சாம்பிகா ததா.

முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசந மர்தநா
ஸர்வதேவாஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதாரா ரூபஸௌபாக்ய தாயீநீ
வாக்தேவீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸநா.

சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்தமத்யா நிரஞ்ஜநா.

ஹம்ஸாஸநா நீலஜங்க்கா ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதீ தேவ்யா நாம்நாமஷ்டோத்தரம் சதம்.

இதி ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம் சம்பூர்ணம்.
 
 

தாய் மூகாம்பிகை



                          அன்னை ஸ்ரீ மூகாம்பிகை

கர்நாடமாநிலமஉடுப்பி மாவட்டத்திலசெளபர்நிகநதிக்கரையிலஅமைந்துள்ளது, சாஸ்திரத்தின்படி கட்டப்பட்டு, கட்டடககலையினஅழகம்சத்துடனகூடிதாயமூகாம்பிகதிருக்கோயில். கர்நாடகமமட்டுமின்றி, நமதநாட்டினஅனைத்துபபகுதிகளிலஇருந்துமஏராளமாபக்தர்களதாயமூகாம்பிகையினசக்தியஉணர்ந்தபல்லாயிரக்கணக்கிலவந்தசெல்கி்ன்றனர்.

விஜயதசமி இத்திருக்கோயிலிலவித்யாதசமி என்பெயரிலகொண்டாடப்படுகிறது. தங்களுடைகுழந்தையினகல்வியஇத்திருத்தலத்திற்கவந்ததாயமூகாம்பிகையவணங்கியதுவக்கி வைக்கின்றனர். அதனால்தானவிஜயதசமி, வித்யாதசமி என்றழைக்கப்படுகிறது.

தல வரலாறு!

கோமகரிஷி எனுமரிஷி இங்கதவமிருந்தஅருளபெற்றதனாலஇவ்விடத்திற்ககொல்லூரஎன்றும், கோலபுரஎன்றுமஅழைக்கப்படுகிறது. காமஅசுரனஒடுக்குவதற்காமகாலஷ்மியினஅருளவேண்டி கோமகரிஷி இங்குதானகடுமதவமபுரிந்தார். அவரினதவத்தஏற்மகாலஷ்மி, சிவனினஅருளவேண்டி தவமிருந்தஅமரத்துவமபெறயிருந்நிலையிலஅவனதேவி ஊமையாக்கினார். அதன்பிறகஅந்அசுரனமூக்காசுரன் (ஊமஅரக்கன்) என்றழைக்கப்பட்டான். ஆனாலஅதற்குபபிறகுமஅந்அசுரனஅடங்கவில்லை. சிவனிடமும், ஹரியிடமுமசாகவரமபெற்அவனதேவி தனதபடையுடனவந்தகொண்டார்.




இத்திருத்தலத்தினமூலஸ்தானத்திலஉள்ஜோதிரலிங்வடிவத்திலேயேதானதாயமூகாம்பிகவணங்கப்படுகிறார். தண்ணீரிலஅமர்ந்தவாறஇருக்குமபீடத்திலதங்கத்தாலகோடுடனஜோதிரலிங்கமஉள்ளது. பிரம்மனும், விஷ்ணுவும், மகேஸ்வரனுமஎவ்வாறஸ்ரசக்கரத்தினாலவழிபடப்படுகின்றனரோ, அதுபோலவஜோதிரலிங்கத்தினஇந்ஆதி சக்தி இங்கவணங்கப்படுகிறார்.

இக்கோயிலினகர்ப்கிரகத்திலபிரகருதி, சக்தி, காளி, லஷ்மி, சரஸ்வதி ஆகிதெய்வங்களினவிக்ரகங்களுமஉள்ளது. ஜோதிரலிங்கத்தினமேற்குததிசையிலபஞ்லோகத்தினலாஸ்ரீதேவியினசிலஉள்ளது. இதுவவிழாககாலங்களிலஊர்வலமாகககொண்டுவரப்படும். தாயமூகாம்பிகசங்குடனும், சக்கரத்துடனுமபத்மாசனத்திலஅமர்ந்துள்ளார். 

இக்கோயிலினஉளபிரகாரத்தில் 10 கைகளுடனகூடிபுகணபதியவணங்கலாம். மேற்கபுரத்திலஆதிசங்கரரதவமிருந்பீடமஉள்ளது. அதற்கஎதிரிலஆதிசங்கரரினவெள்ளைககல்லாலாசிலஉள்ளது, அதிலஆதிசங்கரரினமந்திரங்களபொறிக்கப்பட்டுள்ளது. கோயிலநிர்வாகத்தினசிறப்பஅனுமதி பெற்றஆதிசங்கரரினபீடத்ததரிசிக்முடியும். வடகிழக்கமூலையிலயாசசாலையும், வீரபத்ரேஷ்வரரினசன்னதியுமஉள்ளது. மூகாசுரனுடனதேவி சண்டையிட்வீரபத்ரேஷ்வரரஅவருடனநின்றசண்டையிட்டார். வீரபத்ரருக்கவிபூதியால்தானஇங்கபூசசெய்யப்படுகிறது. கோயிலினவெளி பிரகாரத்திலபலி பீடமும், கொடிககம்பமும், தீபக் கம்பமும் உள்ளது. கொடிககம்பமஇங்கதங்கததகடுகளாலவேயப்பட்டுள்ளது.

கார்த்திகமாதத்திலஇங்கதீஉற்சவமநடக்குமபோததீபககம்பத்திலஉள்விளக்குகளஅனைத்துமஏற்பட்டஅழகுடனகாட்சியளிப்பதைககாணலாம். இத்திருத்தலத்திலஒவ்வொரநாளுமபல்லாயிரக்கணக்காபக்தர்களுக்கஅன்னதானமஅளிக்கப்படுகிறது. கோயிலிற்கவெளியவந்தாலஅதனமேற்குபபக்சாலையிலதிரியம்பகேஸ்வரர், சிருங்கேரி மடத்திலஈஸ்வரரகோயிலும், மாரியம்மனகோயிலுமஉள்ளன. மேலுமவழிபாட்டுததலங்களையுமகாணலாம். காஞ்சி காமகோடி பீடமஇங்கவேபாடசாலஒன்றநடத்தி வருகிறது.


விழாக்கள் :




வித்யாதசமி மட்டுமின்றி, சந்திஆண்டினதுவக்கத்தைககுறிக்குமசந்திரமானயுகாதி, ராநவமி, நவராத்திரி, சூரிஆண்டினதுவக்கத்தைககுறிக்குமசெளரமனயுகாதி, மூகாம்பிகஜென்மாஷ்டமி, விநாயசதுர்த்தி, கிருஷ்தசமி, நரகசதுர்தசி ஆகியனவுமஇங்கவிமர்சையாதிருவிழக்களாகும்.

கொல்லூருக்குசசெல்வதஎப்படி?

கர்நாடமாநிலத்தினகரையோமாவட்டமாஉடுப்பியிலஅமைந்துள்ளதகொல்லூர். கர்நாடதலைநகரபெங்களூருவிலஇருந்து 500 ி.ீ. தூரத்திலும், துறைமுநகராமங்களூருலஇருந்து 135 ி.ீ. தூரத்திலுமஉள்ளது. மங்களூருக்கசாலை, ரயில், விமானம், கடலமார்க்கங்களிலசெல்லலாம். உடுப்பியிலஇருந்து 35 ி.ீ. தூரத்திலும், குந்தாபூரரயிலநிலையிலஇருந்து 43 ி.ீ. தூரத்திலுமஉள்ளது. அருகிலஉள்விமானதளமமங்களூர்.

தாயமூகாம்பிகதிருக்கோயிலிற்கவருமபக்தர்களதங்சராசரி கட்டணத்திலேயதங்குமிடங்களஉள்ளன.