அன்னை ஸ்ரீ மூகாம்பிகை
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் செளபர்நிகா நதிக்கரையில் அமைந்துள்ளது, சாஸ்திரத்தின்படி கட்டப்பட்டு, கட்டடக் கலையின் அழகம்சத்துடன் கூடிய தாய் மூகாம்பிகை திருக்கோயில். கர்நாடகம் மட்டுமின்றி, நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாய் மூகாம்பிகையின் சக்தியை உணர்ந்து பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கி்ன்றனர்.
விஜயதசமி இத்திருக்கோயிலில் வித்யாதசமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தங்களுடைய குழந்தையின் கல்வியை இத்திருத்தலத்திற்கு வந்து தாய் மூகாம்பிகையை வணங்கியே துவக்கி வைக்கின்றனர். அதனால்தான் விஜயதசமி, வித்யாதசமி என்றழைக்கப்படுகிறது.
தல வரலாறு!
கோல மகரிஷி எனும் ரிஷி இங்கு தவமிருந்து அருள் பெற்றதனால் இவ்விடத்திற்கு கொல்லூர் என்றும், கோலபுரா என்றும் அழைக்கப்படுகிறது. காமா அசுரனை ஒடுக்குவதற்காக மகாலஷ்மியின் அருளை வேண்டி கோல மகரிஷி இங்குதான் கடும் தவம் புரிந்தார். அவரின் தவத்தை ஏற்ற மகாலஷ்மி, சிவனின் அருளை வேண்டி தவமிருந்து அமரத்துவம் பெறயிருந்த நிலையில் அவனை தேவி ஊமையாக்கினார். அதன்பிறகு அந்த அசுரன் மூக்காசுரன் (ஊமை அரக்கன்) என்றழைக்கப்பட்டான். ஆனால் அதற்குப் பிறகும் அந்த அசுரன் அடங்கவில்லை. சிவனிடமும், ஹரியிடமும் சாகா வரம் பெற்ற அவனை தேவி தனது படையுடன் வந்து கொண்டார்.
![]() | |||
இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்தில் உள்ள ஜோதிர் லிங்க வடிவத்திலேயேதான் தாய் மூகாம்பிகை வணங்கப்படுகிறார். தண்ணீரில் அமர்ந்தவாறு இருக்கும் பீடத்தில் தங்கத்தால் ஆன கோடுடன் ஜோதிர் லிங்கம் உள்ளது. பிரம்மனும், விஷ்ணுவும், மகேஸ்வரனும் எவ்வாறு ஸ்ரீ சக்கரத்தினால் வழிபடப்படுகின்றனரோ, அதுபோலவே ஜோதிர் லிங்கத்தின் இந்த ஆதி சக்தி இங்கு வணங்கப்படுகிறார்.
இக்கோயிலின் கர்ப்ப கிரகத்தில் பிரகருதி, சக்தி, காளி, லஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் விக்ரகங்களும் உள்ளது. ஜோதிர் லிங்கத்தின் மேற்குத் திசையில் பஞ்ச லோகத்தினலான ஸ்ரீதேவியின் சிலை உள்ளது. இதுவே விழாக் காலங்களில் ஊர்வலமாகக் கொண்டுவரப்படும். தாய் மூகாம்பிகை சங்குடனும், சக்கரத்துடனும் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.
இக்கோயிலின் உள் பிரகாரத்தில் 10 கைகளுடன் கூடிய தச புஜ கணபதியை வணங்கலாம். மேற்கு புரத்தில் ஆதிசங்கரர் தவமிருந்த பீடம் உள்ளது. அதற்கு எதிரில் ஆதிசங்கரரின் வெள்ளைக் கல்லாலான சிலை உள்ளது, அதில் ஆதிசங்கரரின் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்றே ஆதிசங்கரரின் பீடத்தை தரிசிக்க முடியும். வடகிழக்கு மூலையில் யாசசாலையும், வீரபத்ரேஷ்வரரின் சன்னதியும் உள்ளது. மூகாசுரனுடன் தேவி சண்டையிட்ட வீரபத்ரேஷ்வரர் அவருடன் நின்று சண்டையிட்டார். வீரபத்ரருக்கு விபூதியால்தான் இங்கு பூசை செய்யப்படுகிறது. கோயிலின் வெளி பிரகாரத்தில் பலி பீடமும், கொடிக் கம்பமும், தீபக் கம்பமும் உள்ளது. கொடிக் கம்பம் இங்கு தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில் இங்கு தீப உற்சவம் நடக்கும் போது தீபக் கம்பத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் ஏற்பட்டு அழகுடன் காட்சியளிப்பதைக் காணலாம். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. கோயிலிற்கு வெளியே வந்தால் அதன் மேற்குப் பக்க சாலையில் திரியம்பகேஸ்வரர், சிருங்கேரி மடத்தில் ஈஸ்வரர் கோயிலும், மாரியம்மன் கோயிலும் உள்ளன. மேலும் பல வழிபாட்டுத் தலங்களையும் காணலாம். காஞ்சி காமகோடி பீடம் இங்கு வேத பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது.
விழாக்கள் :
![]() | |||
வித்யாதசமி மட்டுமின்றி, சந்திர ஆண்டின் துவக்கத்தைக் குறிக்கும் சந்திரமான் யுகாதி, ராம நவமி, நவராத்திரி, சூரிய ஆண்டின் துவக்கத்தைக் குறிக்கும் செளரமன் யுகாதி, மூகாம்பிகா ஜென்மாஷ்டமி, விநாயக சதுர்த்தி, கிருஷ்ண தசமி, நரகா சதுர்தசி ஆகியனவும் இங்கு விமர்சையான திருவிழக்களாகும்.
கொல்லூருக்குச் செல்வது எப்படி?
கர்நாடக மாநிலத்தின் கரையோர மாவட்டமான உடுப்பியில் அமைந்துள்ளது கொல்லூர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து 500 கி.மீ. தூரத்திலும், துறைமுக நகரான மங்களூருல் இருந்து 135 கி.மீ. தூரத்திலும் உள்ளது. மங்களூருக்கு சாலை, ரயில், விமானம், கடல் மார்க்கங்களில் செல்லலாம். உடுப்பியில் இருந்து 35 கி.மீ. தூரத்திலும், குந்தாபூர் ரயில் நிலையில் இருந்து 43 கி.மீ. தூரத்திலும் உள்ளது. அருகில் உள்ள விமானதளம் மங்களூர்.
தாய் மூகாம்பிகை திருக்கோயிலிற்கு வரும் பக்தர்கள் தங்க சராசரி கட்டணத்திலேயே பல தங்குமிடங்கள் உள்ளன.
babyliss pro titanium flat iron - titanium-arts.com
பதிலளிநீக்கு1 page1 - babyliss pro titanium flat iron · 1 page · 1 author1 of titanium hammer 4 · titanium ion color 1 year ago · titanium nail 0 comments · 1 titanium alloy nier replicant authors titanium joes